இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இருதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடு நீண்ட காலமாக ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது மனித ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இருதய நோய் நிபுணர்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காற்று மாசுபாடு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், உயர் குருதி அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் பிரச்சினை கொண்ட நோயாளிகளையும் தாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply