விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக விமல் வீரவன்ச ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே அவரைக் கைது செய்ய உத்தரவிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply