வளரும் வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்த வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றம் மற்றும் CDC Events இணைந்து, வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில் முதன் முறையாக வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ளது.
இந்த வர்த்தக கண்காட்சி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் யாழ்கலாசார மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய வர்த்தக தொடர்புகள் மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை கட்டியெழுப்பும் முயற்சியாகவும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக வணிகங்களின் தளமாகவும் இந்த கண்காட்சி அமையவுள்ளது.
பங்கேற்பாளர்கள் தொழில்துறை செயற்பாடுகளை நேரில் அறியவும் தமது புதிய தயாரிப்புக்களை மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும் அதே சமயம் பொது தனியார் மற்றும் அரசுத்துறை நிர்வாகிகளுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தக் கண்காட்சி பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறுவதால் பங்கேற்பாளர்களுக்கு அதிவேக வர்த்தக தொடர்புகளும் வணிக வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் கனகசபை பூரணச்சந்திரன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் துணைத் தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.