உகாண்டாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை மாற்றியமைக்க நடவடிக்கை

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது.

உலக சுகாதாரப் புள்ளிவிபரங்கள் 2023 அறிக்கையின் படி, உகாண்டாவானது அதிக அளவில் மது அருந்தும் நாடுகளில் பட்டியலில் முன்னணியில் உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, உகாண்டா மக்கள் தற்போது ஆண்டுக்கு ஒரு நபருக்கு 12.2 லீட்டர் மது உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய சராசரியை விட கணிசமாக அதிகமாக காணப்படுகின்றது.

ஒருவர் 21 வயதிற்குள் மது உட்கொள்ளவில்லை என்றால், அவர்கள் பிற்காலத்தில் அடிமையாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என ஆராய்ச்சிகளில் சுட்டிக்காட்டப்படுவதாக, மனநலம், மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கான சுகாதார அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் ஹஃப்சா லுக்வாடா தெரிவத்திருந்தார்.

இளைஞர்கள் மத்தியிலான மதுப் பாவனை குறித்து ஒரு பொதுவான எதிர்ப்பு உள்ளதாகவும் டாக்டர் லுக்வாடா மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, விரைவில் முன்வைக்கப்படவுள்ள மதுக் கட்டுப்பாடு மசோதாவில் வயது எல்லை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து உகண்டா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply