அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டம் – அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றக் கூட்டம் அவசரமாக கூடவுள்ளதன் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்கான அவசர நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை கூடவுள்ளமையாலேயே அரைமச்சர்களுக்கு இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்திற்குப் பின்னர் அன்றைய தினம் பிற்பகல் வாக்கெடுப்பு நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று பிற்பகல் கூடி, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply