விஞ்ஞானி ஜான் குட் எனப் இயற்கை எய்தினார்

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஜான் குட்எனப் இயற்கை எய்தினார்.

இறக்கும் போது அவருக்கு வயது 100.

வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியமைக்காக 2019 ஆம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.

இரசாயனவியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் இவர் பகிர்ந்து கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply