மின்சார கார்களால் வீதிகளுக்கு இரு மடங்கு சேதம் – ஆய்வில் தகவல்

பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார கார்களால் வீதிகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய வாகனங்களை விட மின்சார கார்கள் சாலைகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சாலைகளில் சிறிய அளவில் ஏற்படும் விரிசல்கள் எதிர்காலத்தில் பெரிய பள்ளங்களை உண்டாக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர சமீபகாலமாக எஸ்யூவி க்கள் எனப்படும் அதிக நிறையுள்ள  கார்களின் வருகையும் வீதிகளைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் நிறை காரணமாக அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் சேதமடையக் கூடும் எனவும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்ததை அடுத்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply