மெக்சிகோவில் அதிகரித்த வெப்பம் – 100 பேர் பலி

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ் வரை உயர்ந்ததால்,  கடந்த இரண்டு வாரங்களில் மெக்சிகோவில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த மாதம் மூன்று வார காலமாக நீடித்த வெப்பநிலையால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த ஜூன் 18 – 24 ஆகிய நாட்களுக்குள் அதிக இறப்புக்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய அனைத்து இறப்புகளும் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டதாகவும், ஒரு சில இறப்புக்கள் நீரிழிவினால் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில், சுமார் 64% இறப்புகள் டெக்சாஸின் எல்லையில் உள்ள நியூவோ லியோனின் வடக்கு மாநிலத்தில் நிகழ்ந்ததாகவும், ஏனையவை தமௌலிபாஸ் மற்றும் வெராக்ரூஸில் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்திய நாட்களில், மழை காரணமாக, வெப்பநிலை குறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சில வடக்கு நகரங்களில் இன்னும் அதிக வெப்பநிலை காணப்படுவதாகவும், சோனோரா மாநிலத்தில், அகோஞ்சி நகரில் கடந்த புதன்கிழமை 49 பாகை செல்சியஸ்பாதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply