வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல்  நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும்  கட்டாயமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்   பணியகத்தில் பதிவு செய்யவேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமப் பத்திரத்துக்கான செல்லுபடியான கால எல்லை ஒரு வருடம் எனவும்  குறித்த முகவர் நிறுவனத்தை  தொடர்ந்து இயக்குவதாயின்,  உரிமத்தை நீட்டிப்பதற்கு  பணியகத்தின் ஒப்புதல் சட்டத்தின் விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவுக் கட்டணம், பழைய கட்டணம்  ரூ.17,928.00 ரூபாவாக காணப்பட்டது. புதிய கட்டணம் ரூ.21,467.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம், பழைய கட்டணம் ரூ.3, 774.00 புதிய கட்டணம் ரூ.4,483.00.

வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் பழைய கட்டணம் ரூ.58,974.00 புதிய கட்டணம் ரூ.117,949.00 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply