சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் சட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, அது சட்ட விரோத வாகனம் என்று நிரூபிக்கப்பட்டால், சுங்கத்தின் பொறுப்பில் வைக்கப்படும்.
- இனிமேல் இந்த நடைமுறையின்றி, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.