உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில், சுப்பர் – 6 சுற்றுப்போட்டிகளில் இன்று சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதின.
சிம்பாப்வே – புலவாயோ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி 32.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, சேன் வில்லியம் 56 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராசா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 33.1 ஓவர்கள் நிறைவில் 01 விக்கெட்டை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில், அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 101 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கை அணி தகுதிபெற்றுக்கொண்டது.