இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் சீனாவின் செங்டு ரியன்பு (Chengdu Tianfu) சர்வதேச விமான நிலையங்களுக்கிடையே, ஏர்- சைனா விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றிலிருந்து வாரத்திற்கு மூன்று விமானங்கள் என்ற அடிப்படையில் குறித்த விமான சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் விமானம் நேற்று இரவு 8.20 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் பயணித்த 142 பேர், கண்டிய நடனத்துடனும், இலங்கையின் தேநீர் பரிசுப் பொதிகளுடனும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
ஏர் சைனா லிமிடெட் என்பது சீன மக்கள் குடியரசின் மூன்று பிரதான சீன விமான நிறுவனங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பெய்ஜிங்கின் ஷுனி மாவட்டத்தில் உள்ளது.
2017 ஆம் ஆண்டில், குறித்த நிறுவனம் 81 சதவீதமான மக்களை அதாவது 102 மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளை ஏற்றிச் சென்றது.
இது 2007 இல் ஸ்டார் விமான சேவைகளுடன் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.