அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம் அண்மையில் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வரும்போது, 80 மில்லியன் பெறுமதியான தங்கப் பவுண் மற்றும் நவீன கைத் தொலைபேசிகளுடன்  கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இலங்கை சுங்கத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் போது இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காரணத்தை காட்டுமாறு சபாநாயகர் ரஹீமிடம் கேட்டுள்ளதாகவும், எனினும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளை விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் 7.5 மில்லியன்  அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply