எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு இம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டியுள்ளது.
இதனையடுத்து, எதிரவரும் 17 ஆம் திகதி வரை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு படைகளை அனுப்புவதற்கான ஒப்பந்தத்தில் போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சிறப்பு படைப்பிரிவில் 75 இக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களோடு, எம்.ஐ-17 ஹெலிகொப்டர்கள் என்பனவும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோ 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.