விலைக்குறைப்பு செய்யாத உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உணவுகளின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் துறைக்கு மின் கட்டணம் 27 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், 5 ஆயிரம் ரூபாயிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட சமயல் எரிவாயுவின் விலை, 2900 ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளை 10 வீதத்தால் குறைக்க தாம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். எனவே, நுகர்வோர் இன்று முதல் இந்த விலைக்குறைப்புடன் இவற்றை கொள்வனவு செய்ய முடியும்.
அதையும் மீறி, ஏதேனும் ஒரு உணவகத்தில் பழைய விலையில் இவை விற்கப்பட்டால், அந்த உணவகத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுமாறும் நுகர்வோரிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.