கிராம சேவகர்களுக்கும் சமாதான நீதவான் பதவி

கிராம உத்தியோகத்தர்களும் இப்போது சமாதான நீதவானின் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்  என அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர மற்றும் தற்போது சேவையில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் ஒவ்வொரு நிர்வாக கிராம உத்தியோகத்தரும் இலங்கை குடியரசின் சமாதான நீதியரசராக கடமையாற்ற வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சீர்திருத்த அமைச்சரால் 1978 ஆம் ஆண்டின் இலக்கம் 2 இல், நீதித்துறைச் சட்டத்தின் 61 ஆவது வாசிப்பின் கீழ் , 45 ஆவது பிரிவில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply