செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த ஏறக்குறைய 300 பேர் காணாமல் போயுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவி குழு நேற்று தெரிவித்துள்ளது.
ஒரு படகில் 65 பேரையும் மற்றைய படகில் 50 முதல் 60 பேரையும் ஏற்றிச் சென்றதாகவும், செனகலில் இருந்து ஸ்பெயினை அடைய முயற்சித்ததில் இருந்து 15 நாட்களாக காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது படகு கடந்த ஜூன் 27 அன்று ஏறக்குறைய 200 பேருடன் செனகலில் இருந்து புறப்பட்டது.
இதனையடுத்து, அவர்களது குடும்பங்களை சேர்ந்தோர் கவலையில் உள்ளதாகவும், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.