லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
நேட்டோ கூட்டமைப்பின் விதிகளின்படி, தற்போது உக்ரைனை இணைத்தால், அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் போரிட வேண்டியிருக்கும் என அதிபர் ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து, போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை உடனடியாக நேட்டோவில் இணைக்க முடியாது என்றாலும், தொடர்ந்து ஆயுத உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.