பூஞ்சை தொற்று காரணமாக கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு மரணம் ஏற்பட்டதாகவும், ஜூன் மாதத்தில் ஐந்து மரணங்கள் நிகழ்ந்ததாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறித்த மரணங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பூஞ்சை தொற்று காரணமாகத்தான் மரணங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.