வடக்கு மாகாணத்தின் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சம்பள உயர்வை கோரியும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியை தாம் மேற்கொண்ட போதும் தமக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான சம்பளம் தமது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை எனவும் உரிய அதிகாரிகள் தமது சம்பளம் தொடர்பான கோரிக்கையினையும் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையினையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக் கொண்டனர்.