நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்

விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அமெரிக்காவின் நாசா  விண்வெளி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது.

எழுபத்தையாயிரம் கோடி செலவில் செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த 4 புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக உள்ளன.

அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடியுள்ளது.

அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டுகிறது. இதில் சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் உள்ளன.

அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply