ரஷ்ய போர் விமானம் விபத்து

ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குதல் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அதன்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான விபத்து இடம்பெறப்போவதை உணர்ந்த விமானி ஜெட்பேக் மூலம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறிய அடுத்த சில நொடிகளில் அந்த போர் விமானம் அசோவ் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான விமானத்தை 1980 களில் இருந்து ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனுடனான போரில் அதிக தடவைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply