ஹிஜாப் சட்டத்தை மீண்டும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு ஈரான் அடிப்படைவாத அரசு தீர்மானித்துள்ளது.
மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது ஈரானிய பொலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும், ஹிஜாப் கட்டாயச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் துன்பம் அனுபவித்ததாக புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக ஹிஜாப் சட்டம் இருப்பில் இருந்தது.
தற்போது மீண்டும் அச்சட்டத்தை அமுல்படுத்த ஈரான் அரசு மும்மரமாகச் செயற்பட்டு வருகின்றது.
இதனையடுத்து, ஈரானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் தேர்தலில் களமிறங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு போராட்டத்தில் ஈடுபடுவோர், தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால் அது நிராகரிக்கப்படலாம், என்பதால் பலர் போராட்டங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.