எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலுக்கும் மா நிறுவனங்கள் பணம் திரட்டுவதாகவும் அவர் கூறினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன்.
எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து.
ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை இறைத்தவர்கள் பிரீமா நிறுவனம் தான்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.
இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன் ” எனக் குறிப்பிட்டார்.