இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால நீடிப்பின் படி, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரை ஜி.எஸ் பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிச்சலுகை மூலம், நன்மையை பெறும் நாடுகள் எவ்வித நட்டத்தையும் எதிர்நோக்காத வகையிலேயே நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய முறைமையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பின்பற்றப்படும் 27 சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ், இந்த வரிச்சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.