2023ம் ஆண்டின் ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அட்டவணையின் படி, இலங்கையில் 9 போட்டிகளும், பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ள நிலையில் இப் போட்டிகள் ஒகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 17ம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளன.
பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு A யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு B யிலும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இடம்பெறவுள்ள போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கிலும், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தானின் லாஹுர் மற்றும் மல்டன் (Maltan) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் மாதம் 2ம் திகதி கண்டி பல்லேகலையில் இடம்பெறவுள்ளதுடன், இறுதி போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.