கென்யாவில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இதனால், கென்யாவின் நைரோபி மற்றும் மொம்பாசா ஆகிய நகரங்களிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம், கென்யாவின் எதிர்க்கட்சியினரால், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கம் வரி உயர்வை அறிமுகப்படுத்திய பின்னர், அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு எதிராக பல போராட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டது.
போராட்டக்காரர்களை அடக்க பொலிஸார் களமிறங்கியதால் அது வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்களால் பொலிஸார் தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தைக கண்டித்து, மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்தை விமர்சித்துள்ளன.
மேலும், நைரோபியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால், அருகில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 50 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டங்கள் மேலும் அதிகரிக்குமனால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், கென்யாவின் காவல்துறைத் தலைவர், நாடு முழுவதும் கலகத் தடுப்பு அதிகாரிகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.