பாடசாலை சீருடைகளை அஸ்வெசும பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன்படி, பாடசாலை சீருடைக்கு பதிலாக அஸ்வெசும கணக்கில் பணம் வரவைப்பதன் மூலம் இத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் மூலம் 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இது வரையில் இலவசமாக வழங்கப்பட்ட சீருடைகள் நிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதற்கான முக்கிய காரணம் இலவசமாக வழங்கப்படும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களே எனவும் தெரிவித்துள்ளார்.