கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அழைப்பு!

கனேடியத் தமிழர் பேரைவயின் ஏற்பாட்டில் 15ஆவது ஆண்டுக் கனேடியத் தமிழர் நிதி சேர் நடையை   முன்னிட்டு சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாடு ஜூலை மாதம் 28 ஆம் திகதி காலை 11.00 முதல் 11.45 மணி வரை 31, St Kilda’s Lane, Marine Drive, Colombo 3, Sri Lanka எனும் முகவரியில் அமைந்துள்ள ஹோட்டல் மாராதாவில் இடம்பெறவுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக, கனடிய தமிழ் பேரவை இந்த நிதி சேர் நடையை ஏற்பாடு செய்து வருகிறது. 

மேலும், இதன் மூலம் இன்று வரை ஒரு மில்லியன் கனேடிய டொலர்களிற்கும் மேலான உதவித் தொகைகள்

திரட்டப்பட்டேதாடு, இந்த நிதி இலங்கையிலும் கனடாவிலும் பலரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கடந்த ஆண்டு திரட்டப்பட்ட நிதி மூலம் இலங்கையில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருக்கும் ஆறு வைத்தியசாலைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த ஊடக சந்திப்பின் போது 2022 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட நிதியின் செயற்திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும், 2023 ஆம் ஆண்டின் கனடியத் தமிழர் நிதி சேர் நடை

குறித்த அறிவிப்பும் அதன் மூலம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்தி இலங்கையில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அனைவரதும் ஆதரவையும் பங்களிப்பையும்

எதிர்பார்ப்பதாக கனேடியத் தமிழர் பேரைவ அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக விபரங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள (416) 240-0078 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது info@canadiantamilcongress.ca மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கனடியத் தமிழர் நிதி சேர் நடை குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு www.tamilcanadianwalk.ca என்ற இணையத்தளத்திலும் பார்வையிட முடியும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply