இந்தோனேசியாவில் டுவிட்டர் முடக்கம்

எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் டுவிட்டர் தளமானது இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளது.

இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பெரும் சிக்கல் நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபாசம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றுக்கு எதிரான நாட்டின் கடுமையான சட்டங்களுக்கு இணங்காத தளங்களின் ஆட்களப் பெயர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தின் தன்மையை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்கம் X ஐத் தொடர்பு கொண்டதாகக் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை அமைச்சின் பணிப்பாளர் ஜெனெரல் உஸ்மான் கன்சோங் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் 270 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 24 மில்லியன் பயனர்களைக் டுவிட்டர் கொண்டுள்ளதோடு, இவர்களால் டுவிட்டர் தளத்தினை கையாள முடியாமல் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply