உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் 2019 இன் சாதனையை இது முறியடிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், இந்த பூமி உலகளாவிய வெப்பநிலையின் சகாப்தத்தில் நுழைகிறது என்றார்.

அதிகரித்த வெப்பமானது, முக்கியமாக புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பருவநிலை மாற்றத்தை இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும், இனி காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் விவரித்தார்.

கடந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளில் ஜூலை மிகவும் வெப்பமான மாதமாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

சமீபத்திய வாரங்களில் உலகம் அதிக அளவு வெப்பத்தை காண்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஏராளமாக இருப்பதால், ஜூலை வெப்பமான மாதத்திற்கான தற்போதைய சாதனையை முறியடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, உலகின் வெப்பமான நாள் ஜூலை 6 அன்று நிகழ்ந்தது எனவும், மேலும் இதுவரை பதிவுசெய்யப்பட்ட  நாட்களில் வெப்பமான 23 நாட்கள் இந்த மாதத்தில் இருந்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாதத்தின் முதல் 25 நாட்களில்  சராசரி வெப்பநிலை 16.95 செல்சியஸ் ஆகும். இது கடந்த ஜூலை 2019 முழுவதுமான காலப்பகுதியில் நிலவிய 16.63 செல்சியஸ் சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ளது.

உலகின் அதிகரித்த வெப்பமயமாதலுக்கு மனித நடவடிக்கைகளும் புதைபடிவ எரிபொருட்களின் உமிழ்வுகளுமே பெரும்பாலும் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply