சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – தேர்தல் பணிகள் ஆரம்பம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்  அமெரிக்க  தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன.

ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அமெரிக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

குடியரசு கட்சி சார்பில், டெனால்ட் டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே உள்ளிட்ட 13 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.

அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி நிலவும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால், விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில்,  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு தமிழர்கள் இவர்கள் எனவும், அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவார் எனவும், அவருக்கு 37 வயதாகும் நிலையில், இவர் ஜனாதிபதி ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை இவரைச் சாரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply