வறட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் விலை திருப்திகரமாக இல்லை என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு விரைவில் அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் என்றார்.
நெல் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்கிறது.
இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்படும் விலை திருப்திகரமாக இல்லை. அடுத்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூடும் போது இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம் என ஹிரியாலவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாமல் தெரிவித்தார்.
அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் தலையிட்டோம். அது தொடர்பான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறே நாம் இந்த விடயம் தொடர்பிலும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
மக்கள் சார்பாக நாங்கள் எப்போதும் தலையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.