நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மீண்டு வருவதால் இந்த ஆண்டு பல சந்தர்ப்பங்களில் மின்னணு உபகரணங்கள், சானிட்டரிவேர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட நூற்றுக்கணக்கான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்நிய செலாவணி நெருக்கடியின் காரணமாக குறைந்த வெளிநாட்டு நாணய வரவால் மேலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.
இருப்பினும், மார்ச் 2020 இல் தடை செய்யப்பட்ட வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.