இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்து, வத்தளை பிரதேசததைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்த நபரொருவர், அவரை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகப்படுத்திவிட்டு, அவரிடமிருந்த 8 இலட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்க ஆபாரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அவிசாவளை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இவர் செய்யததாக குறிப்பிடப்படும் ஒழுங்கற்ற நடவடிக்கையினால் அவரின் விசாவை இரத்து செய்து மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க அந்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனா்.
அதற்கமைய, இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் தயார்ப்படுத்திக் கொடுக்க முடியும் என்று தெரிவித்து சந்தேகநபர் இந்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பினூடா கிடைக்கப்பெற்ற அறிவிப்புக்கு அமைய அவரை சந்திப்பதற்கு குறித்த பெண் இங்கிரிய பிரதேசத்துக்குச் சென்றுள்ளாா். அதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
இதுபோன்ற சம்பவங்கள் அண்மை காலத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில்முறையற்ற வகையில் இடம்பெறும் இதுபோன்ற அணுகல் முறைகளை நாடி சிக்கல்களை சந்திக்க வேண்டாம் என்றும் இதுபோன்ற தொடர்பாடல்களின்போது மிக அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.