அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலையில் சால்ட் லேக் சிட்டியின் தெற்கே உள்ள ப்ரோவோவில் உள்ள ஒரு இல்லத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சந்தேக நபரான கிரேக் ராபர்ட்சன் என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் பைடன் மற்றும் ஹாரிஸூக்கு ஒன்லைனில் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான குற்றவியல் விசாரணைக்கு பிராக் தலைமை தாங்கியதால், மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக்கிற்கு எதிராகவும், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்டிற்கு எதிராகவும் சந்தேக நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருவப்படுத்தப்பட்ட அமெரிக்காவில் அரசியல் வன்முறைகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.
ரொய்ட்டர்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 1970 களில் இருந்து அமெரிக்காவில் அரசியல் வன்முறைகள் மிக மோசமான நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.