ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பெர்னாண்டோ வில்லவிசென்சியோ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு தலைநகர் குய்ட்டோவில் அவர் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ புதன்கிழமை இரவு தலைநகர் குய்ட்டோவில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அதனால், ஈக்வடோர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை இந் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.