
மன்னார் றோட்டரிக் கழகத்தினர் ஏற்பாட்டிலும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடனும் இரத்ததான முகாம் ஒன்று மன்னாரில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரத்ததான முகாமில் இளைஞர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சன்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.