பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஹங்வெல்ல – கொழும்பு 143ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தெரிவிக்கையில்,
பிரச்சினைக்கு காரணமான இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முற்பகல் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
