பதுளை வைத்தியசாலைக்கு மீண்டும் மின் விநியோகம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் கட்டணம் நிலுவையில் இருந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மின்சாரக் கட்டணம்  70 மில்லியன் ஆகக் காணப்பட்ட நிலையில், தாதியர் பயிற்சி மையம், மருத்துவர்கள் தலைமையகம் மற்றும் தாதியர் விடுதிக்கான மின் இணைப்பை நேற்றுக் காலை இலங்கை மின்சார சபை துண்டித்திருந்தது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம்  20 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்திய பின்னர், மீதமுள்ள நிலுவைத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததையடுத்து, இலங்கை மின்சார சபை  வைத்தியசாலைக்கு மின் விநியோகம் செய்தது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் இவ்வாறான பொறுப்பற்ற முகாமைத்துவ செயற்பாடுகளினால் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  ஊவா மாகாண இணைப்பாளர் பாலித ரக்கபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையின் குடிநீர் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்களை உள்ளடக்கிய 9.8 மில்லியன்  ரூபா கடனையும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply