வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையகம்’ எனும் தொனிப் பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் இறுதி நாள் இன்றாகும்.
இதன்படி, நாலந்தா பகுதியில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபவணி மாத்தளையை நோக்கி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் 29ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து இந்த பேரணி ஆரம்பமானது.
இறுதி நாளான இன்றைய தினம் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது இந்த நடைபவனியின் கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணிக்கு வலுசேர்க்கும் முகமாக பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலும் ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரையிலும் இன்றைய தினம் நடைபவணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.