சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால், மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் விழுந்த சிசு ஒன்று, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்திற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த துயர அனுபவத்தை சந்தித்துள்ளார்.
41 வயதான அவரது கணவர் குமாரசிங்க திஸாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “எனது மனைவி கல்லஞ்சிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஆம்புலன்ஸில் அனுராதபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், பிரசவத்திற்காக லேபர் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் என் குழந்தை தரையில் விழுந்துவிட்டது.
தற்போது குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை சரியாக முதிர்ச்சியடையவில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், அவர்கள் வீழ்ச்சி பற்றி பேசவில்லை என்றார்.
ஆனால், பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.