13 ஐ அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வணக்கத்துக்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், முதலில் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்று பெய்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் பிரதமகுரு விளக்கமளித்தார்.

ஜனாதிபதி தேர்தலை அறிவித்து, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கேளுங்கள். அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்க மக்கள் தயாராக இருந்தால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டு, எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள ஆணையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவ்வாறான உரிமை இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான ஆணை எதுவும் இல்லை எனவும், தற்போதைய அரசாங்கம் பதவிகளை தேர்தல் மூலம் அல்ல, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தவர்களின் உதவியுடன் பெற்றதாகவும் அவர் மேலும் விளக்கினார்.

வணக்கத்துக்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது  இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply