நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் நடைமுறையாகும் வகையில் சாதாரண சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் ஐசோப்ளோரின் மற்றும் சியோப்ளோரின் போன்ற மயக்கமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறித்த சங்கத்தின பொதுச்செயலாளர் எஸ்.பீ.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாதாரண சத்திர சிகிச்சைகள், நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தாதி மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.