நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில், விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நலன்புரி நன்மைகள் சபையினால் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறான தகவல் அளித்து சலுகை பெற்றவர்கள் இருப்பின், பெறப்பட்ட பணத்தை மீட்டு நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.