இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அடுத்த வருடத்தில் ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்திற்காக இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த மாதம் இடம்பெற்ற 6வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு, தொழிநுட்ப தடைகள் மற்றும் சட்டசிக்கல்கள் குறித்த அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்திற்கான இணக்கப்பாடுகளை இந்த வருட இறுதிக்குள் எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருட முற்பகுதியில் அதில் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்காக எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.