சர்ச்சையைக்குரிய ரோஹித ராஜபக்சவின் செயற்கை கோள் விவகாரம் – வெளியான அதிரடி அறிவிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் சீனாவில் ரொக்கெட் தயாரிப்பதற்காக முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக சர்ச்சைத் தகவல் ஒன்று  வெளியாகியிருந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுப்ரீம்சாட் (பிரைவேட்) லிமிடெட் எனும் குறித்த நிறுவனம் ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல எனவும், இது சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் இற்கு சொந்தமான துணை நிறுவனம் எனவும் கூறியுள்ளது. 

இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில்,

இந்த திட்டம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஒரு தனியார் முதலீடாக செய்யப்பட்டது. ரோஹித ராஜபக்ஷ நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப பணிப்பாளர் பதவியில் பணியமர்த்தப்பட்டார்.

ஆனால் அவர் முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதால் தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக தாம் உருவாக்கிய மாபெரும் வாய்ப்பை குறுகிய அரசியல் இலக்குகளுடன் அழித்து கடந்த தசாப்தத்தில் பொய்யான பிரசாரங்கள் பரப்பப்பட்டன என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply