மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.