2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் இதர செயலமர்வுகளை நடத்துவதற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தடையை மீறி இதுபோன்ற ஆயத்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,888 தேர்வு மையங்களில் அக்டோபர் 15ஆம் திகதி தேர்வு நடைபெற உள்ளமையை கருத்திற்கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.