எதிர்வரும் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் திணைக்களம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், இது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டாலும், யூகங்களின் படி 2028 அல்லது 2030க்குள் ஓய்வூதியம் வழங்குவதில் அரசாங்கம் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பணிக்கொடை கொடுப்பனவுகள் தாமதமாகின்றமையும், தற்போது மாதாந்திர ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுகிறமையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.